"உலக ஒழுங்கில் பிளவு" — ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலால் மேலாதிக்கம் செலுத்தப்பட்ட உலகப் பொருளாதார மன்றம்
கடந்த செவ்வாய்க்கிழமை உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) உரையாற்றிய கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளால் சூழப்பட்ட உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறை, உலகப் போரை நோக்கி வேகமாகச் செல்வது குறித்த ஒரு கடுமையான சித்திரத்தை வரைந்து காட்டினார்.
